மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் - தஞ்சாவூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

சிறையில் இருக்கும் கணவனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை, மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2023-12-12 06:51 IST

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கழுகபுளிக்காட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மனைவி பர்வீன்பானுவை தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள ஜேம்ஸை ஜாமீனில் எடுக்க அவரது தாய் ஆரோக்கிய மேரி முயற்சித்து இருக்கிறார்.

இதனால் மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பர்வீன்பானு, வீட்டிலிருந்த அரிவாளால் மாமியாரை துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பர்வீன்பானுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்