சாலையோரம் வீசப்பட்ட உணவு காலாவதியான பொருட்கள்
சாலையோரம் வீசப்பட்ட உணவு காலாவதியான பொருட்கள்
அவினாசி
உணவு பாதுகாப்பு சட்டப்படி காலக்கெடு முடிந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவைகளை முறையாக அகற்ற வேண்டும். ஆனால் அவினாசி சாலையப்பாளையம் அருகே 2020-2021-ம் ஆண்டுகளில் காலாவதியான சாக்லெட், ஜாம், ஊறுகாய், நூடுல்ஸ், குளிர்பான பாக்கெட்டுகள் ஆகியவை கொட்டப்பட்டிருந்தது. காலாவதியான பொருட்களை யார்? கொட்டினார்கள் என்பது தெரியவில்லை. அவற்றை அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அள்ளி அவினாசி உரப்பூங்காவில் கொண்டு போய்ச்சேர்த்தனர்.