பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார நிகழ்ச்சி

பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-07 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடியில் சித்திரை திருவிழாவையொட்டி வாணியர் உறவின் முறையார்களின் பொதுச் சபை சார்பில் பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கள்ளழகர் அந்த மண்டகப்படியில் எழுந்தருளி மச்சவ அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராமன் அவதாரம், கிருஷ்ண அவதாரம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய கள்ளழகரை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரமக்குடி வாணிய உறவின் முறையார்களின் பொதுச்சபை தலைவர் ஆசிரியர் செல்லம், செயலாளர் கேசவன், துணை தலைவர் ராமச்சந்திரன், துணை செயலாளர் நாகராஜன், பொருளாளர் சதீஷ்பாபு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். வரும் 11-ந் தேதி பால்குட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று கள்ளழகருக்கு பாலாபிசேகம் செய்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். 

Tags:    

மேலும் செய்திகள்