மதுரையில் துணிகரம் - போலீஸ்காரரின் வீட்டில் நகை, பணம் கொள்ளை

மதுரை மத்திய சிறை போலீஸ்காரரின் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2023-04-18 20:58 GMT


மதுரை மத்திய சிறை போலீஸ்காரரின் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

போலீஸ்காரர்

திருமங்கலம் தாலுகா சிக்கம்பட்டி நடராஜ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 43). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி மதுரை ஆவினில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டனர்.

மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன.

நகை, பணம் கொள்ளை

மேலும் அதில் இருந்த 7 பவுன் நகைகள், 2 லட்ச ரூபாய் கொள்ளை ேபானது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள். போலீஸ்காரர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்