கூத்தாநல்லூர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

கூத்தாநல்லூர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-08-29 16:39 GMT

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி சாலை பிரதான போக்குவரத்து சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் பகல் நேரம் மட்டுமன்றி, இரவு நேரங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் இந்த சாலை அமைந்துள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், அரசுத்துறை சார்ந்த வாகனங்கள், கனரக வாகனங்கள் முதல் சிறிய ரக வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்கின்றன.

போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் தினமும் சுற்றித்திரிகின்றன. பகல் நேரங்களை விட, இரவு நேரங்களில் அதிகமாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

விபத்து

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கேயும், படுத்தும் மாடுகள் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்