அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா நடைபெற்றது.;

Update:2023-08-13 01:32 IST

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் கருகாத்த கருமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு இளநீர், பால், பன்னீர், திருநீரு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்