படுகர் இன நடனமாடி வாக்கு சேகரித்த திருப்பூர் எம்.எல்.ஏ., மேயர்

Update: 2023-02-25 16:18 GMT


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் குழுவினர் பிரசார பணியில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று

ஈரோடு மாநகராட்சி 27-வது வார்டு கோட்டை பகுதி திருநகர் காலனியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அப்போது படுகர் மலைவாழ் மக்களின் பாரம்பரிய பாடல் ஒலிக்கப்பட்டது. க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் உள்ளிட்டவர்கள் படுகர் இன பாரம்பரிய நடனமாடி வாக்கு சேகரித்தார்கள். இதுபோல் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., பெரிய மத்தளத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு மத்தளம் அடித்தும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.

மேலும் செய்திகள்