தொடர் மழையின் காரணமாக நிரம்பி வழியும் தடுப்பணைகள்

தொடர் மழையின் காரணமாக ஏற்காடு அடிவாரத்தில் தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.

Update: 2022-08-26 22:07 GMT

கன்னங்குறிச்சி:

சேலத்தின் நீராதாரங்களில் கன்னங்குறிச்சி புதுஏரி முக்கியமான ஒன்றாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் மலைப்பாதையில் கட்டப்பட்டிருந்த கோம்பை தடுப்பணை உள்பட 3 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து உபரிநீர் புதுஏரிக்கு வந்தவண்ணம் உள்ளது. இதனால் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் அதிகாரிகள் ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புதுஏரி விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தங்கள் விளை நிலங்களில் நெல் நடவுக்கான வேலைகளை முனைப்புடன் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்