உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு பதாகைகள் சேதம்

ஆலங்குடி அருகே உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு பதாகைகளை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தினர்.

Update: 2022-06-26 18:59 GMT

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையொட்டி ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை நெடுகிலும் அவரை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் வம்பன் பகுதியில் இருந்து திருவரங்குளம் பகுதி வரை வைக்கப்பட்டிருந்த பதாகைகளை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்