பூச்சி-நோய் தாக்குதலால் கரும்பு சாகுபடி பாதிப்பு

பூச்சி-நோய் தாக்குதலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-08-22 18:56 GMT

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலையின் எறையூர் மற்றும் புதுவேட்டக்குடி ஆகிய கரும்பு கோட்டங்களில் கரும்பு வயல்களில் பூஞ்சான நோய் (பொக்கபோயங்கு) மற்றும் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகரித்து, கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அறிவுறுத்தலின்பேரில், எறையூர் மற்றும் புதுவேட்டக்குடி பகுதியில் பாதிப்பு ஏற்பட்ட கரும்பு வயல்களை கடலூர் கரும்பு ஆராய்ச்சி மையம் சார்பில் பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், தங்கேஸ்வரி மற்றும் நிபுணர் குழுவினர், கரும்பு அபிவிருத்தி அலுவலர் ஆனந்தன், கோட்ட கரும்பு அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் நோய் தாக்குதலுக்கு உள்ளான கரும்பில் பூஞ்சான நோய், மஞ்சள் இலை நோய் என்ற வைரஸ் நோய் ஆகிய நோய்களும், மாவுப்பூச்சி என்ற பூச்சியினமும் மிதமான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதை உறுதி செய்து, கரும்பு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்