காட்டுப் பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்

கொடைக்கானலில் காட்டுப் பன்றிகளால் விளைநிலங்கள் சேதமாகி வருகின்றன.

Update: 2022-08-28 17:08 GMT

கொடைக்கானல் தாலுகா மேல்மலை பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் உட்பட ஏராளமான விவசாய விளைபொருட்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளதால் அவை வனப்பகுதிகளை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து காட்டுப் பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். கோர்ட்டுவை உத்தரவைப் பெற்று அதனை சுட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்