ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படும் தென்காரவயல் சாலை

மன்னார்குடி அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படும் தென்காரவயல் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-15 19:00 GMT

மன்னார்குடி;

மன்னார்குடி அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படும் தென்காரவயல் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காரவயல் சாலை

மன்னார்குடியை அடுத்த தென்காரவயல் கிராமத்துக்கு மன்னார்குடி- கும்பகோணம் நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது.பல ஆண்டுகளான சேதமடைந்து கிடந்த இந்த சாலையை சீரமைக்கக்கோாி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதன் விளைவாக கடந்த 9 மாதங்களுக்கு முன் இந்த சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. சாலையில் செம்மண் கொட்டப்பட்டு அதன் மேல் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் தார்போடப்படாமல் ஒன்பது மாதங்களாக ஜல்லிக்கற்களுடன் இந்த சாலை அரைகுறை சாலையாக காட்சி அளிக்கிறது.

தார் சாலை

சாலையில் வாகனங்களை செல்லும் பொழுது ஜல்லிக்கற்களில் இருந்து கிளம்பும் தூசியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். 9 மாதங்களாக நீடிக்கும் இதே நிலையால் இப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக தார் சாலையாக செப்பனிட்டு தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள்

இதுகுறித்து தென்காரவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்கூறியதாவது:-

கடந்த 16 வருடங்களாக குண்டும்- குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்த இந்த சாலை கிராம மக்களின் தொடர் முயற்சியால் சீரமைக்கும் பணி தொடங்கி ஜல்லிக்கற்கள் வரை கொட்டப்பட்டது. ஆனால் கடந்த 9 மாதங்களாக தார் போடப்படாமல் ஜல்லிக் கற்களுடனே பணி நின்றுவிட்டது.குறிப்பாக இருசக்கர வாகனங்களில் இந்த சாலையில் செல்லும் போது வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகிறது. பள்ளி மாணவ- மாணவிகள் இந்த சாலை வழியாக சென்று வருவதால் காலை நேரத்தில் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி தென்காரவயல் சாலையை விரைவில் சீரமைத்து தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்