லாரிகள் செல்ல வசதியாக தார் சாலை அமைக்கப்படுமா?

பட்டுக்கோட்டை அருகே நெல் சேமிப்பு கிடங்கிற்கு லாரிகள் செல்ல வசதியாக தார் சாலை அமைக்கப்படுமா? என்று ஓட்டுனர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-07-08 21:27 GMT

கரம்பயம்;

பட்டுக்கோட்டை அருகே நெல் சேமிப்பு கிடங்கிற்கு லாரிகள் செல்ல வசதியாக தார் சாலை அமைக்கப்படுமா? என்று ஓட்டுனர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நெல் சேமிப்பு கிடங்கு

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திட்டக்குடி ஊராட்சியில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையக்கூடிய நெல்மணிகளை கொண்டு வந்து பத்திரமாக வைக்க 14 ஆயிரத்து 500 டன் கொள்ளளவு கொண்ட மூடிய நெல் சேமிப்பு கிடங்கும், 6ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கும் உள்ளது.இந்த சேமிப்பு கிடங்கில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விளையக்கூடிய நெல்மணிகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து திட்டக்குடி ஊராட்சியில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து பத்திரமாக வைப்பது வழக்கம்.

சேறும் சகதியுமான சாலை

இதன்பின் அங்கிருந்து நெல்மணிகளை எடுத்து மற்ற ஊர்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்த சேமிப்பு கிடங்கிற்கு லாரிகள் மூலம் நெல் கொண்டு வருவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இது குறித்து லாரி டிரைவர்கள் கூறியதாவது:-இந்த நெல் சேமிப்புக் கிடங்கு மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலையில் இருந்து சேமிப்புக் கிடங்கு எல்லைக்குள் லாரிகள் வந்ததும் லேசான மழை தூரினாலே சேரும் சகதியுமாக சாலை மாறி நாற்று நடக்கக்கூடிய வயலை போல காட்சியளிக்கிறது. லாரிகள் அதிக பாரங்களுடன் தொடர்ந்து வந்து செல்வதால் இந்த மண் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் லாரி டிரைவா்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

தார் சாலை

சில சமயங்களில் அந்த சேற்றின் நடுவே செல்லும் போது டயர்கள் பஞ்சராகி விடுகிறது. இதனால் அந்த சேற்றின் நடுவில் நின்று டயர்களை மாற்ற டிரைவா்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் சேற்றில் டயர்கள் வழுக்கி லாரியின் மேலே உள்ள நெல்மூட்ை்டகள் கீேழு விழுந்து விடுகிறது.எனவே திட்டக்குடியில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கிற்கு நெல்லை கொண்டு வரும் லாரி டிரைவர்கள் சிரமம் கருதி திட்டக்குடி நெல் சேமிப்பு கிடங்கிற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்