குடியிருப்புகள் மத்தியில் நிற்கும் சேதமடைந்த மின்கம்பம்
பட்டுக்கோட்டையில் குடியிருப்புகள் மத்தியில் நிற்கும் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையில் குடியிருப்புகள் மத்தியில் நிற்கும் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
பட்டுக்கோட்டை நகரம் 1-வது வார்டு காமாட்சி நாயுடு பாளையம் பகுதியில் ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டால் ஆன இந்த மின்கம்பத்தில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின் கம்பத்தில் கடந்த ஒரு மாதமாக மின் விளக்கும் எரியவில்லை.
மின்கசிவு
குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள இந்த பழுதடைந்த மின் கம்பத்தில் இருந்து மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.எனவே சேதமடைந்து நிற்கும் இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.