தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.

Update: 2022-07-06 19:23 GMT


ஏரிக்கரையில் குப்பைகள் அள்ளப்படுமா?

திருப்பத்தூரில் இருந்து மாடப்பள்ளி வரை பெரிய ஏரி கரை பகுதிகளில் நகராட்சி சார்பில் தூய்மைப் பணி நடந்தது. அப்போது ேசகரித்த குப்பைகள் ஏரிக்கரையோரம் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குப்பைகளை இன்னும் அள்ளவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் இருந்து புழு, பூச்சிகள் வெளியேறி தண்ணீரில் புகுகிறது. அந்தத் தண்ணீரை மாடுகள் குடிக்க வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஏரிக்கரையோரம் சேகரித்து வைத்த குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும்.

-பாபு ராஜேந்திரகுமார், திருப்பத்தூர்.

சைக்கிள்களை நிறுத்த நிழற்கூட வசதி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் சிலர் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிளில் வந்து ெசல்கிறார்கள். அவர்களின் சைக்கிள் மழையிலும், வெயிலிலும் உள்ளது. சைக்கிள்களை நிறுத்தி ைவக்க நிழற்கூட வசதியை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தி தருமா?

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.


 மீட்டர் பெட்டியின் அவல நிலை

குடியாத்தம் புதுப்பேட்டை சின்னா முதலி தெரு-பண்டார முத்தையன் தெரு ஆகியவற்றின் சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவில் எதிரே மின்கம்பம் உள்ளது. அதில் உள்ள சுவிட்ச் மற்றும் மீட்டர் பெட்டி ஆபத்தான நிலையில் திறந்தே கிடக்கிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூடி வைக்க முன்வருவார்களா?

-சிசுபாலன், குடியாத்தம்.

சுடுகாட்டை பராமரிக்க வேண்டும்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வாணியம்பாடி சாலையில் சுடுகாடு உள்ளது. அந்தச் சுடுகாட்டில் தான் திருப்பத்தூரில் உள்ள அனைத்து பிணங்களும் அடக்கம் செய்யப்படுகின்றன. அந்தச் சுடுகாட்டுக்கு ஏராளமான பிணங்கள் வருகின்றன. எனினும் அந்த சுடுகாடு பராமரிப்பில்லாமல் உள்ளது. முட்புதர்கள் வளர்ந்து காடு போல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

-அ.சு.பழனி, சிவராஜ்பேட்டை, திருப்பத்தூர்.

முருகன் கோவிலுக்கு ரோப் கார் வசதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா எலத்தூர் மோட்டூர் நட்சத்திரகோவில் மலைமீது வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் மலைமீது செல்ல ரோப் கார் வசதிைய எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. ெதாகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைத்துத்தருவார்களா?

-அ.வெங்கிடேசன் முதலியார், கலசபாக்கம்.

 குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கே.வி.குப்பம் பஸ் நிலையம் எதிரில் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகப் பெருக்கெடுத்து சாலையில் ஓடுகிறது. இதனால் தார் பெயர்த்தபடி குட்டைபோல காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீணாகும் குடிநீரை தடுக்க ேவண்டும்.

-மாணிக்கம், குடியாத்தம்.

Tags:    

மேலும் செய்திகள்