தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

Update: 2022-06-23 18:20 GMT



பன்றிகள் தொல்லை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட நாரைக்குளம், நாரைக்குளமேடு, கிழக்குப் பஜார் வீதி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே தினமும் நூற்றுக்கணக்கான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகள், கழிவுநீரை கிளறி அசுத்தம் செய்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-பரசுராமன், சோளிங்கர்.

 நிழற்குடை கட்ட வேண்டும்

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள மாங்கால் கூட்ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் நிழற்குடை இல்லாததால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாங்கால் கூட்ரோட்டில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

-அப்துல்பாட்ஷா, தூசி.

 சாலையில் வீசப்பட்ட மருத்துவக்கழிவுகள்

வந்தவாசி தேரடி பகுதியில் பல தனியார் மருத்துவமனைகள உள்ளன. அங்கு நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசிகள், குளுகோஸ் டியூப்கள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் சாலை வீசப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-கந்தன், வந்தவாசி.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

வந்தவாசியில இருந்து எய்ப்பாக்கம் வரை டபிள்யூ:5 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. அந்தப் பஸ்சை இடைேய நிறுத்தி விட்டனர். எனவே இடையில் நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை போக்குவத்துத்துறை அதிகாரிகள் மீண்டும் இயக்க வேண்டும்.

-மா.அண்ணாமலை, அம்மணம்பாக்கம்.

பின்பக்கம் பெயர் பலகை இல்லாத அரசு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் செய்யாறு பணிமனை பஸ்களில் பெரும்பாலும் பின் பக்கம் பெயர் பலகை இல்லாமல் தான் இயக்கப்படுகின்றன. நகர பஸ்கள் மற்றும் விரைவு பஸ்கள் எங்குச் செல்கிறது எனத் தெரியாமல் மக்கள், பயணிகள் சிரமப்படுகின்றனர். பஸ் எங்குச் செல்கிறது என்ற ஸ்டிக்கர் கூட ஒட்டப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், செய்யாறு.

இ.பி.அலுவலகத்தில் குடிநீர் வசதி

போளூர் மின்வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் இ.பி.பில் கட்ட வரும்போது குடிக்க குடிநீர் கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர். இ.பி.அலுவலகத்துக்கு ெவளியே குடிநீர் வசதி செய்து தருவார்களா?

-ஆட்டோ க.முத்து, சமூக ஆர்வலர் போளூர்.

சாலை பழுது

பேரணாம்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் தார் ெபயர்ந்து சேதமாகி பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும்போது அந்த இடத்தில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோருக்கு சிரமமாக உள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

Tags:    

மேலும் செய்திகள்