'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-30 16:21 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்கள் தொல்லை

பழனி அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் நோயாளிகளையும், அவர்களை பார்க்க வருபவர்களையும் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், பழனி.

குப்பையால் சுகாதாரக்கேடு

பழனி அடிவாரம் பொன்னகரம் பகுதியில் மழைக்காலத்தில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருவில் ஓடுகிறது. அப்போது கால்வாயில் மிதக்கும் குப்பைகள் தெருவில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்து, பழனி

சேதமடைந்த தரைப்பாலம்

திண்டுக்கல்லை அடுத்த எட்டிக்குளத்துப்பட்டியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. மேலும் பாலத்தில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. தரைப்பாலம் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த இடத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, எட்டிக்குளத்துப்பட்டி.

நிழற்குடை அமைக்கப்படுமா?

திண்டுக்கல்-திருச்சி பைபாஸ் சாலையில் சீலப்பாடி பிரிவு பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வடிவேல், சீலப்பாடி

Tags:    

மேலும் செய்திகள்