தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-05-29 16:19 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாக்கடை கால்வாயில் அடைப்பு

சின்னமனூர் 23-வது வார்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டி, சின்னமனூர்.

சேறும், சகதியுமான பாதை

நிலக்கோட்டை தாலுகா கரியாம்பட்டியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. மழைக்காலங்களில் இங்கு தண்ணீர் தேங்குவதால் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-ராவணன், கரியாம்பட்டி.

வங்கி அமைக்கப்படுமா?

சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சியில் வங்கிகள் இல்லை. இதனால் பண பரிவர்த்தனைக்காக இங்குள்ள முதியவர்கள் கம்பியம்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வங்கி வசதிய ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளையராஜா, வல்லம்பட்டி.

சேதமடைந்த மேற்கூரை

திண்டுக்கல் பாரதிபுரம் ஜெ.ஜெ.நகர் அங்கன்வாடி மையத்தில் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு குழந்தைகளை அனுப்பவே பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கார்த்தி, திண்டுக்கல்.

Tags:    

மேலும் செய்திகள்