'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-22 20:58 GMT

குவிந்துள்ள குப்பை

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் அருகே கருக்கம்பாளி செல்லும்பிரிவு ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஓரம் 5 இடங்களில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற ஆவன செய்ய வேண்டும்.

பொதுமக்கள், கருக்கம்பாளி.

திறப்புவிழா எப்போது? 

பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தைக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் திறப்பு விழா நடைபெறவில்லை. இதனால் வியாபாரிகள் சந்தைக்கு அருகே உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து தற்காலிக கடைகள் போட்டுள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டி முடித்துள்ள வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும்.

ஜோசப், கருமாண்டிசெல்லிபாளையம்.

கைப்பிடி சுவர் இல்லை

வெள்ளையம்பாளையத்திலிருந்து சந்தியபாளையம் செல்லும் ரோட்டில் நீரோடையின் மீது பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களிலும் கைப்பிடிச்சுவர் இல்லை. பாலத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று தடுமாறினாலும் நீரோடைக்குள் விழுந்து விடுவார்கள். மேலும் அங்கு மின்விளக்கு வசதியும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்துக்கு கைப்பிடி சுவர் கட்டி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

ரவீந்திரன், அந்தியூர்.

மின்கம்பத்தை சுற்றி புதர்

வேம்பத்தி எட்டிக்குட்டை ரேஷன் கடை அருகே ஒரு மின்கம்பத்தை செடி-கொடிகள் சுற்றி ஆக்கிரமித்துள்ளன. இதனால் மின்கம்பத்தின் பாதி பகுதி வெளியே தெரியாத அளவுக்கு புதராக உள்ளது. செடி, கொடிகள் மின் கம்பத்தின் மீது உயரமாக படர்ந்து மின்கம்பிகளில் உரசினால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். எனவே மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமாள், எட்டிக்குட்டை.

மூடப்படாத தொட்டி

கோபி பஸ் நிலையம் அருகில் சத்தி செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் தொட்டி உள்ளது. வேலை நிமித்தமாக இந்த தொட்டியின் மூடியை அகற்றினார்கள். அதன்பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டார்கள். பகல் நேரங்களில் தொட்டி திறந்து இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும். ஆனால் இரவு நேரத்தில் தெரியாது. இருசக்கர வாகன ஓட்டிகள் தெரியாமல் அதில் இறங்கிவிட்டால் விபத்து ஏற்பட்டு விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து கிடக்கும் தொட்டியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

---------------

Tags:    

மேலும் செய்திகள்