'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-09 21:19 GMT

குவிந்து கிடக்கும் குப்பை

கோபியில் பச்சமலைக்கு சொல்லும் ரோட்டில் 2 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பையில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கரும்புகை எழுந்து செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்ண்டும்.

பொதுமக்கள், கோபி.

கழிப்பறை திறக்கப்படுமா?

கோபி தாலுகா பெருந்தலையூர் அருகே உள்ள மேற்கு குட்டிபாளையத்தில் பொது கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இந்த கழிப்பறை கடந்த பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே கழிப்பறையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேற்கு குட்டிபாளையம்.

ரோட்டில் பள்ளம்

கோபி டவுனில் இருந்து கடைவீதிக்குச் செல்லும் ரோட்டில் சிறிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த ரோடு வழியாக வாகனங்கள் முறையாக செல்ல முடியவில்லை. ேராட்டில் திடீரென பள்ளத்தை கண்டதும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி தங்களுடைய வாகனங்களை வளைத்து திருப்புவதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே ரோட்டில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

சுகாதாரக்கேடு

கோபியில் இருந்து நாகர்பாளையம் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் அருகே குப்பை மலைபோல் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

மூடப்படாத குடிநீர் தொட்டி

கோபி நகராட்சிக்கு உள்பட்ட தெற்கு பார்க் வீதியில் குடியிருப்புகளுக்கு குடிநீர் செல்வதற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. பின்னர் அதில் குழாய் போடப்பட்டது. ஆனால் குடிநீர் தொட்டி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இரவில் வாகனங்களில் செல்பவர்கள் தொட்டிக்குள் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

பழுதடைந்த மின் கம்பம்

கொளப்பலூர் பேரூராட்சியில், மேட்டுவளவு 5-வது வார்டில் உள்ள ஒரு பெட்டிக்கடை அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அந்த மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேட்டுவளவு.

கரடு, முரடான ரோடு 

கோபிகிருஷ்ணன் வீதியில் இருந்து காட்டுக்கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் குழாய்கள் பதிக்க நீண்ட தூரத்துக்கு குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி சரிவர மூடப்படவில்லை. இதன்காரணமாக அந்த ரோடு கரடு, முரடாக காணப்படுகிறது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து செல்கிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

திசைகாட்டி பலகை தேவை

ஈரோடு- சத்தியமங்கலம்- பவானி சாலையில் கணக்கம்பாளையம் பிரிவில் கலைஞர் சிலை உள்ளது. அங்குள்ள சந்திப்பில் திசைகாட்டி பலகை வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக புதிதாக வாகனங்களில் வருபவர்கள் தாங்கள் செல்லும் பகுதி எது என்பதை கண்டுபிடிக்க சிரமப்பட்டு குழம்பி விடுகிறார்கள். எனவே அந்த சந்திப்பு பகுதியில் திசைகாட்டி பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

Tags:    

மேலும் செய்திகள்