'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-05 21:49 GMT

குவிந்துள்ள குப்பைகள்

கோபி மேட்டுவளவில் கமலா ரைஸ் மில் 4-வது வீதியில் 2 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மேட்டுவளவு.

வேகத்தடை வேண்டும்

பங்களாப்புதூர் சத்தி-அத்தாணி ரோட்டில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பங்களாப்புதூர்.

வடிகால் வசதி

டி.என்.பாளையம் கொண்டையம்பாளையம் கிராமம் காட்டுவலவு பகுதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. மேலும் மின்சார வசதியும் கிடையாது. உடனே சாக்கடை வடிகாலும், மின்சார வசதியும் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காட்டுவலவு.

பஸ் இயக்கப்படுமா?

அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடி, ஈரோடு வழியாக திருச்செங்கோட்டுக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய் பரவல் அதிகரித்து இருக்கும்போது நிறுத்தப்பட்ட அந்த பஸ் அதற்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடி, ஈரோடு வழியாக திருச்செங்கோட்டுக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

ரோட்டில் பள்ளம்

ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள நாச்சியப்பா 2-வது வீதியில் இருந்து முதலாவது வீதிக்கு செல்லும் ரோட்டின் வளைவில் ஒரு பெரிய பள்ளம் பல நாட்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே பள்ளத்தை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ஈரோடு.

பாராட்டு

அந்தியூரில் இருந்து ஒலகடம், குட்டமேடு வழியாக மும்மிரெட்டிபாளையம், காௌந்தபாளையம் வரை மினிபஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கொரோனா 2-ம் அலைக்கு பிறகு பஸ் இயக்கப்படவில்லை. எனவே மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடா்ந்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். தற்போது பஸ் மீண்டும் இயக்கப்படுகிறது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு பாராட்டுக்களை தொிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மும்மிரெட்டிபாளையம்.

நன்றி

அந்தியூரை அடுத்த வேம்பத்தி கிராமம் ஓசைபட்டி பெரியசாமி கோவில் அருகில் கழிவுநீர் செல்லும் சிறிய பாலம் பழுதடைந்து காணப்பட்டது. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது அங்கு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஓசைபட்டி.

Tags:    

மேலும் செய்திகள்