தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-28 15:53 GMT

பயணிகள் நிழற்குடையை சரி செய்ய கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் இருந்து வடக்குத்தொண்டைமான் ஊரணி வரை செல்லும் சாலையில் தெற்கு தொண்டைமான் ஊரணி பிரிவு சாலை அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டபப்ட்டது. தற்போது பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை மற்றும் சுவர்களில் பல்வேறு இடங்களில் உடைந்து விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், சொக்கநாதப்பட்டி கிராமத்தில் இருந்து சோழகம்பட்டி வரை செல்லும் 2 கிலோ மீட்டர் தார்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சொக்கநாதப்பட்டி.

ஆபத்தான குடிநீர் தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா தட்டாமனைப் பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மிக பலவீனம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தூண்கள் அனைத்தும் வெடித்து பிளவுபட்டு உள்ளன. இப்பகுதியில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே மாணவ- மாணவிகளின் நலன் கருதி அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்கவும், விரைவில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தட்டாமனைப்பட்டி.

இரவு நேர பஸ்களை தடையின்றி இயக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது இல்லை. குறிப்பாக இரவு 8 மணி தொடங்கி இரவு 1 மணி வரை இயக்கப்படும் 6 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதேபோல் அரசு பஸ்களும் சரிவர இயக்கப்படுவது இல்லை. இதனால் தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவமனைக்கு சென்று திரும்பும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் பஸ்களை தடையின்றி இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

தெருவிளக்கு வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி முகைதீன் ஆண்டவர் மலை பகுதி பழைய மேல்நிலைப்பள்ளி அருகிலும், மாயான எரிமேடை எதிர்புறம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருட்டாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தெருவிளக்கு அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி

Tags:    

மேலும் செய்திகள்