தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-07 18:52 GMT

குப்பைகளை அகற்ற கோரிக்கை

கரூர் மதுரை பை-பாஸ் சாலையில் இருந்து சின்னாண்டாங்கோவில் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளது. இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்பட பல்வேறு கழிவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும், மேலும் அப்பகுதியில் மீண்டும் குப்பைகள் கொட்டமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரூர்.

பள்ளத்தை சரி செய்ய வலியுறுத்தல்

கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் சொட்டையூலிருந்து புங்கோடை வரை பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து புதிதாக சாலை போடப்பட்டது. இந்நிலையில்முனிநாதபுரம் பகுதியில் தார் சாலை ஓரத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே நெடுகிலும் தார் சாலை ஓரத்தில் சீரமைக்கப்படாமல் பள்ளம், குழியாக உள்ளது. பகல் மற்றும் இரவு நேரத்தில் ஓரமாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் நெடுகிலும் பள்ளம், குழியுமாக இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தை விட்டு நிலைத்திடுமாறி குழிக்குள் விழுந்து செல்கின்றனர். இச்சம்பவம் தினமும் நடைபெற்று வருகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் சீரமைக்கப்படாத உள்ள பகுதியை சீரமைத்து தொடர்ந்து விபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்

மரக்கன்றுகளை நட கோரிக்கை

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் முதல் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வரை இருபுறமும் சாக்கடைக்கால்வாய் அமைத்து தார் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பணிக்காக தார் சாலையில் இருபுறமும் கடந்த பல ஆண்டுகளாக இருந்த பெரிய, பெரிய மரங்களை எந்திரம் மூலம் வெட்டி சாய்த்து அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதி நெடுகிலும் இருந்த நிழல் தரும் மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் உள்ளது. இதனால் தார் சாலை ஓரத்தில் எந்த ஒரு தடுப்புகளும் வைக்காதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது எனவே இருபுறமும் இருந்த பெரிய மரங்களை வெட்டிய பகுதிகளில் ஓரத்தில் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வர வேண்டும் என அப்பகுதி பொதுமகக்ள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கந்தம்பாளையம்.

வாகன ஓட்டிகள் அவதி

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை சேலம்-மதுரை, கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேம்பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இந்த இருபுறங்களில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் பாலத்துறை முதல் தவுட்டுப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து மெதுவாக நடைபெற்று வருகிறது. .அதே போல் அப்பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சாலையின் அருகிலேயே கார்களை, லாரிகளை நிறுத்தி விட்டு சாப்பிட சென்று விடுகின்றனர். இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவில் தார் சாலை உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

பொதுமக்கள், தவிட்டுப்பாளையம்.

தேங்கி நிற்கும் மழைநீர்

கரூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கரூர் வாழைக்காய் மண்டி எதிரே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். மேலும் எப்போது மழை பெய்தாலும் இந்த இடத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரூர். 

Tags:    

மேலும் செய்திகள்