தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-17 17:49 GMT

பயனற்று கிடக்கும் அரசு கட்டிடம்

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக குறுநில அளவையர் அலுவலகம் கட்டப்பட்டு இன்று வரை கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் தற்போது அந்த கட்டிடம் சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்வராசு, பெரம்பலூர்

மோசமான சாலையால் நோயாளிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், ஊட்டத்தூர் செல்லும் சாலையில் தெற்குப் பகுதியில் பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட புற நோயாளிக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பாடலூர்.

மின்விளக்குகளை சரிசெய்ய கோரிக்கை

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு ரோடு கீழ் பாலத்தின் வழியாக இரவு நேரங்களில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்ற. இதனால் பயணிகளின் நலன்கள் கருதி பாலத்தினுள் 2 மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக 2 மின்விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் மேடு, பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

குமார் அய்யாவு, செங்குணம்.

மின்மோட்டார் பழுதை சரிசெய்ய வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பேரளி.

பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் 

பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர் செட்டியார் கடையிலிருந்து தெற்கு இலுப்பைதோப்பு வரை உள்ள சாலை மிகவும் பழுது அடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், மழை காலங்களில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயராமன் ஆனந்தி, கீழப்பெரம்பலூர்

Tags:    

மேலும் செய்திகள்