தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-30 18:53 GMT

பஸ் வசதி இன்றி மக்கள் கடும் அவதி

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், பார்ப்பனச்சேரி பஞ்சாயத்து மறவனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் காலை 8.30 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அரியலூரில் இருந்து மறவனூர் வரை தனியார் மினி பஸ் ஒன்று 5 தடவை வந்தது. அந்த பஸ் கடந்த 3 மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் பார்ப்பனச்சேரி, மறவனூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மறவனூர், அரியலூர். 

Tags:    

மேலும் செய்திகள்