தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-18 19:00 GMT

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு புதுரோடு கிழக்குதெரு பகுதியில் மின் கம்பம் நடப்பட்டு, அதனை சுற்றியுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து மின் கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் தெரிகிறது. இந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பூவிழி, புகழூர், கரூர்.

வழிகாட்டும் பலகையால் குழப்பம்

கரூர் மாவட்டம், குளித்தலையின் முக்கிய சாலை சந்திப்பு சுங்ககேட்டில் வழிகாட்டும் பலகை கரூரில் இருந்து திருச்சி செல்லும் மார்க்கத்திலும், திருச்சியிலிருந்து கரூர் செல்லும் மார்க்கத்திலும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டும் பலகையில் நான்கு திசைகளிலும் ஒரே ஊருக்கு நான்கு விதமான கிலோ மீட்டர் குறிப்பிட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுந்தர், குளித்தலை, கரூர். 

Tags:    

மேலும் செய்திகள்