தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளத்தினை சரி செய்ய கோரிக்கை
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை உள்ளது. இதில் நெடுஞ்சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் சாலையில் ஒரு இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேகத்தடை மழைநீர், கழிவுநீர் செல்வதற்காக இடையூறாக இருந்ததால், அதன் இடையே பள்ளம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது அந்த பள்ளம் விபத்து ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. இந்த பள்ளத்தை வாகன ஓட்டிகள் சிரமுத்துடன் கடந்து வருகின்றனர். மேலும் பள்ளத்தினால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் எழுந்து செல்கின்றனர். மேலும் மழை பெய்யும் போது அந்த பள்ளத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன் அந்த பள்ளத்தை சரி செய்யவும், மழைநீர், கழிவுநீர் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம், விருத்தாசலம்- கும்பகோணம் நகரப்பகுதி கடைவீதியில் சாலையோரங்களில் ஏராளமான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களும் அங்கு நிறுத்த முடியாமல் சாலையின் நடுவே நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.