தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-13 18:05 GMT

பாராக மாறிய பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குறுக்குச்சாலையில் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலை ஓரத்தில் பயணிகளின் நலன் கருதி நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையின் ஒருபகுதியில் ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் குறுகிய அளவில் பயணிகள் அமரும் வகையில் இருந்தது. அந்த இடத்தில் மதுப் பிரியர்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உடைத்தும், தண்ணீர் பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டும் சென்று விடுகின்றனர். இதனால் அங்கு யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மது பிரியர்கள் வந்து மது அருந்த தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, குறுக்குச்சாலை, கரூர்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் இருந்து கட்டிபாளையம் வழியாக திருக்காடுதுறை செல்லும் தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதன் காரணமாக தார்சாலை நெடுகிலும் மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அசோக்குமார், திருக்காடுதுறை, கரூா்.

Tags:    

மேலும் செய்திகள்