தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-10 17:57 GMT

சாலையை அகலப்படுத்த வேண்டும்

கரூர் மாவட்டம், திண்டுக்கரை முதல் மாயனூர் மணவாசி வரை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவழி சாலையாக மாற்றப்பட்டது. தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து உண்டாகி வகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அகலப்படுத்தி 4 வழிச்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுந்தர், குளித்தலை, கரூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கருர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்னதாராபுரம் ஊராட்சி கரூர்-தாராபுரம் மெயின் சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் தற்போது பெய்த மழையின் காரணமாக மழைநீரும் குப்பைகளுடன் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி

Tags:    

மேலும் செய்திகள்