தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-09-20 18:50 GMT

நோய் பரவும் அபாயம்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி பகுதியில் காலி மனைகள் உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்த இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்க நிற்கிறது. இதனால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், எடமலைப்பட்டி புதூர்

சாக்கடை கால்வாய் கட்டித்தரப்படுமா? 

திருச்சி மாநகராட்சி 30-வது வார்டு மதுரை ரோடு ஜெயில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

தெரு விளக்கு வேண்டும்

திருச்சி மாவட்டம் 49-வது வார்டு சங்கிலியாண்டபுரம் நாகம்மை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருட்டாக காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. இந்த இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும்.

தேவராஜ், சங்கிலியாண்டபுரம் 

Tags:    

மேலும் செய்திகள்