பிரையண்ட் பூங்காவுக்கு வந்த டேலியா நாற்றுக்கள்

கொல்கத்தாவில் இருந்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு டேலியா நாற்றுகள் வந்தன.

Update: 2022-11-30 16:34 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மலர்கண்காட்சி நடைபெற உள்ள கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், பூச்செடிகள் நடவு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2-வது கட்டமாக பூங்காவில், பூச்செடிகள் நடவு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து, 5 ஆயிரம் உயர்ரக டேலியா நாற்றுகள் வந்துள்ளன. இதில் 40 வகைகள் உள்ளன. தற்போது அந்த நாற்றுகள் தரம் பிரிக்கப்பட்டு, 10 நாட்கள் தொடர்ந்து பாலிதீன் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும். அதன் பிறகு அவை, பூங்காவில் நடவு செய்யப்பட உள்ளது.

இந்த டேலியா நாற்றுகள் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்