ராமேசுவரம் பகுதியில் சூறாவளி காற்று-அங்கன்வாடி கட்டிடத்தின் மீது விழுந்த மரம்

ராமேசுவரம் பகுதியில்வீசிய சூறாவளி காற்றால் அங்கன்வாடி கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-18 18:47 GMT

ராமேசுவரம்

ராமேசுவரம் பகுதியில்வீசிய சூறாவளி காற்றால் அங்கன்வாடி கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சூறாவளி காற்று

ராமேசுவரம் கெந்தமாதனபர்வதத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது.

இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளி காற்றால் அங்கன்வாடி மையம் அருகே இருந்த மிகவும் பழமையான வேப்பமரம் முறிந்து அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் அங்கன்வாடி மையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி முழுமையாக உடைந்து சேதமடைந்தது.

வெட்டி அகற்றம்

இரவு நேரத்தில் மரம் முறிந்து அங்கன்வாடி மைய கட்டிடத்தில் விழுந்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மீது முறிந்து விழுந்து கிடந்த மரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வெட்டி அகற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்