திருத்தணி அருகே மனைவியை ஆபாசமாக திட்டியதை தட்டிக் கேட்ட தொழிலாளிக்கு வெட்டு
திருத்தணி அருகே மனைவியை ஆபாசமாக திட்டியதை தட்டிக் கேட்ட தொழிலாளிக்கு வெட்டு விழுந்தது.;
திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் எட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 50). கட்டிட தொழிலாளி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (45). சிவாவின் எதிர் வீட்டில் வசிப்பவர் சின்னதுரை. இவர் கடந்த 20-ந் தேதி குடிபோதையில் சிவாவின் மனைவி ஜெயலட்சுமியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிவாவுக்கும், சின்னதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது சின்னதுரை வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து சிவாவின் தலையில் பலமாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சிவாவை உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து ஜெயலட்சுமி திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சின்னதுரையை தேடி வருகின்றனர்.