சுங்கத்துறை டிரைவர், கேண்டீன் அட்டெண்டர் தேர்வில் முறைகேடு: கைதான 28 பேரும் ஜாமீனில் விடுதலை

சுங்கத்துறை டிரைவர், கேண்டீன் அட்டெண்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 28 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2023-10-15 03:35 GMT

சென்னை,

சுங்கத்துறை டிரைவர், கேண்டீன் அட்டெண்டர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது. கண்டுபிடிக்கப்பட்டது.

அரியானா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் காதில் 'புளுடூத்' வைத்துக்கொண்டு தேர்வில் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக 28 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை செய்தனர்.

விசாரணையின் போது அவர்கள் கூறுகையில், "ரெயிலில் வந்த போது அரியானாவை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் மோசடியை அரங்கேற்றினோம்" என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

இந்த நிலையில், தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 28 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இனி அவர்கள் எந்தவித அரசு போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க முடியாது.

 

Tags:    

மேலும் செய்திகள்