கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

Update: 2023-01-31 18:45 GMT

கடலூர் முதுநகர்,

வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

புயல் எச்சரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. எனவே கடலூர் பைபர் மற்றும் விசை படகு மீனவர்கள் யாரும் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

மேலும் ஆழ் கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

வெறிச்சோடிய துறைமுகம்

இதையடுத்து கடலூர் மீனவர்கள் தங்களின் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் கடலில் தங்கி மீன் பிடித்து வந்த விசைப்படகு மீனவர்களும் கரைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் மீன் வரத்து இல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் நேற்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்