கடலூா் மாவட்டத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெடி குண்டு நிபுணர்கள் சோதனை
கடலூா் மாவட்டத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை வெடி குண்டு நிபுணர்கள் சோதனை செய்தனா்.
கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட நெடுஞ்சாலையோரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை சோதனை செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பொட்டா, முருகேசன் மற்றும் போலீசார் வேப்பூர், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை மெட்டர் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.