கடலூர்: அகழாய்வு பணியில் சோழர் கால நாணயம் கண்டெடுப்பு

40 செ.மீ ஆழத்தில் சோழர் கால செப்பு நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 22:56 GMT

கடலூர்,

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கீழடி, மருங்கூர் உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் பகுதியில் 3 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.

இதில் ஒரு குழியில் 40 செ.மீ ஆழத்தில் சோழர் கால செப்பு நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது முதலாம் ராஜராஜன் காலத்தை சேர்ந்ததாகும். இந்த நாணயம் 23.3. மி.மீ விட்டமும், 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டுள்ளது. நாணயத்தின் முன்பக்கத்தில் மனித உருவம் மற்றும் பின் பக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள மனித உருவமும் காணப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்