பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெரினாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

மெரினாவில் இன்று வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2023-01-15 14:13 GMT

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாட்களில் பொதுவாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது காணும் பொங்கல் தினத்தில் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரைக்கு வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமும் சேர்ந்துள்ளதால், மெரினா கடற்கரையில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிலும் குறிப்பாக இன்று மெரினாவில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்ந்து மக்கள் அதிக அளவில் மெரினாவிற்கு வருகை தந்ததால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சதுக்கத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஆங்காங்கே உதவி மையங்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளைய தினம் மெரினாவிற்கு வரும் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்