திருச்செந்தூரில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அலைவாயுகந்த பெருமாள் - திரளான பக்தர்கள் தரிசனம்
நகர வீதிகளில் குதிரை வாகனத்தில் உலா வந்த அலைவாயுகந்த பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் கூடிய திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, தங்கள் குடும்பங்களோடு சாமி தரிசனம் செய்தனர்.
அதே சமயம் திருச்செந்தூர் கோவிலில் அலைவாயுகந்த பெருமாள் இன்று குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். திருசெந்தூர் நகர வீதிகளில் குதிரை வாகனத்தில் உலா வந்த அலைவாயுகந்த பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.