மத்திய பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் விடுமுறை
பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி சனிக்கிழமை முதல் இன்று வரை என 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருவண்ணாமலையை சேர்ந்த சென்னை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், தொழில் செல்பவர்கள், விடுதியில் தங்கி படிப்பவர்கள் என பலர் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விளையாட்டு போட்டிகள், காளை விடும் விழா போன்றவை நடைபெற்றது.
மக்கள் கூட்டம்
பொங்கல் பண்டிகை நிறைவடைந்த நிலையில் இன்று மாலை விடுமுறை முடிந்து பணிபுரியும் மற்றும் விடுதியில் தங்கி படிப்போர் மீண்டும் தங்கள் பகுதிக்கு செல்வதற்காக திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இதனால் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை, சேலம், புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பஸ்களில் பொதுமக்கள் ஓடி சென்று ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஏறி இடம் பிடித்தனர்.
இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.