ஓசூரில்தி.மு.க. செயற்குழு கூட்டம்

ஓசூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-10-05 19:45 GMT

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஓசூரில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் பி.முருகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, தலைமை கழக பிரதிநிதி வேலூர் ரமேஷ், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் இக்ரம் அகமது மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாடு, இம்மாதம் 14-ந் தேதி நடைபெறும் மகளிரணி மாநாடு குறித்தும், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, பாக முகவர்கள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்