குறுவை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்

சீர்காழி பகுதியில் குறுவை நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-06-17 19:15 GMT

சீர்காழி;

சீர்காழி பகுதியில் குறுவை நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை நடவு பணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட காரைமேடு, எடக்குடி, வடபாதி, கதிராமங்கலம், கன்னியாகுடி, திருப்புன்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், அகர எலத்தூர், அகனி, வள்ளுவக் குடி, அத்தியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் குறுவை நடவு பணி செய்து வருகின்றனர்.மேலும் விளந்திட சமுத்திரம், குன்னம், மாதிரவேலூர், திட்டை, தில்லை விடங்கன், செம்மங்குடி, எடமணல், திருவெண்காடு, மங்கைமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் குறுவை சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் தீவிரம்

தற்போது பல்வேறு இடங்களில் குறுவை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் போதிய மும்முனை மின்சாரம் மற்றும் நடவு செய்ய போதிய ஆட்கள் இல்லாததாலும் நடவு செய்யும் பணி தாமதமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்