நாகை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு இன்று நடக்கிறது
நாகை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு இன்று நடக்கிறது.
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 14 வயதிற்குட்பட்ட மற்றும் 16 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அசோசியேட் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் விளையாட நாகை மாவட்ட கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. நாகை மாவட்டத்தில் வசிப்பவர்கள் அல்லது நாகை மாவட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். 1.9.2009 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்த 14 வயதிற்குட்பட்ட மாணவர்களும், 1.9.2007 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்த 16 வயதிற்குட்பட்ட மாணவர்களும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜுலியஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.