பின்னலாடை நிறுவன அணிகளுக்கான என்.பி.எல். கிரிக்கெட் போட்டி

திருப்பூரில் பின்னலாடை நிறுவன அணிகளுக்கான என்.பி.எல். கிரிக்கெட் போட்டி முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லீக் போட்டிகள் நடைபெற்றது

Update: 2023-05-14 17:57 GMT


திருப்பூரில் பின்னலாடை நிறுவன அணிகளுக்கான என்.பி.எல். கிரிக்கெட் போட்டி முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லீக் போட்டிகள் நடைபெற்றது.

லீக் போட்டிகள்

திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரியில் பின்னலாடை நிறுவன அணிகளுக்கு இடையேயான என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 6-வது வாரமான நேற்று 4 லீக் போட்டிகள் நடைபெற்றது. இந்த லீக் போட்டிகளை நிப்ட்-டீ கல்லூரி முதல்வா் பாலகிருஷ்ணன் தொடங்கி விருதுகள் வழங்கினார். போட்டியில் முதலாவதாக டெக்னோ ஸ்போர்ட்ஸ் அணியும், அனுகிரகா பேஷன் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெக்னோ ஸ்போர்ட்ஸ் அணிகள் 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெக்ேனா ஸ்போர்ட்ஸ் அணி வீரர் ஐசக் ராஜா முகமத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சி.ஆர்.கார்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணி அசத்தல்

2-வது போட்டியில் வர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் சி.ஆர்.கார்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சி.ஆர்.கார்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சி.ஆர்.கார்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணி வீரர் அபிமன்யூ ஆட்டநாயகனாக தோ்வு செய்யப்பட்டார். 3-வது போட்டியில் சுலோச்சனா காட்டன் அணியும், குவாண்டம் நிட்ஸ்-3 அணியும் மோதியது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் குவாண்டம் நிட்ஸ்-3 அணி, சுலோச்சனா காட்டன் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் குவாண்டம் நிட்ஸ்-3 அணி வீரர் ராஜேஷ் குமார் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

4-வது போட்டியில் ேபாஸ் எக்ஸ்போர்ட்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணியும் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணி வீரர் அஜித் குமார் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை(7-வது வாரம்) 4 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்