நித்திரவிளை பகுதியில் மழை: மழைநீர் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல்

நித்திரவிளை பகுதியில் பெய்த மழையால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல் உருவானது.

Update: 2022-07-30 18:45 GMT

கொல்லங்கோடு, 

நித்திரவிளை பகுதியில் பெய்த மழையால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல் உருவானது.

சாலையில் விரிசல்

நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருகி மழைநீர் ஓடைகளில் பாய்ந்து ஓடியது. இதில் காஞ்சாம்புறத்தில் இருந்து மாம்பழஞ்சி செல்லும் சாலையில் கோவில்குளம் பகுதியில் உள்ள ஓடை உடைப்பு ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அந்த சாலை வழியாக அதிக அளவில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. எனவே, சாலைைய சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்