சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்

சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-12-15 18:45 GMT

நன்னிலம் பகுதியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

திருவாரூர் மாவட்டத்தில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் திருவாரூர் நகராட்சியில் மாடுகளை அப்புறப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து திருவாரூர் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது குறைந்துள்ளது. ஆனால் நன்னிலம் மற்றும் சேந்தமங்கலம், வண்டாம்பாளை, கங்களாஞ்சேரி ஆகிய பகுதிகளில் திருவாரூர்-மயிலாடுதுறை செல்லும் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றன.

பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத வகையில் சாலையில் மாடுகள் படுத்து கொள்கின்றன. அப்போது வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி உயிரிழப்பு சம்பவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நன்னிலம் பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்