கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.;
ஒரத்தநாடு அருகே உள்ள பாளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று மேய்ச்சலுக்கு சென்றபோது அதே பகுதியில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு தீயணைப்பு படை நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிய பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.