பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கன் மனைவி மாயழகி. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் அந்த பசு மாடுகளை வீட்டில் கட்டி இருந்தார். அப்போது ஒரு பசு கயிற்றை அவிழ்த்துக் கொண்டு சென்றுவிட்டது. அப்போது பெரியகுளம்-மதுரை சாலை கும்பக்கரை பிரிவு அருகே அந்த வழியாக வந்த அரசு பஸ், பசு மாடு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது. இதுகுறித்து மாயழகி, பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அரசு பஸ் டிரைவரான ஜெகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.