பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இரு பிரிவாக நடைபெற்றது.

Update: 2022-06-25 18:44 GMT

சிவகங்கை அருகே உள்ள கண்டுப்பட்டி குடியிருப்பு காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் கண்டுப்பட்டி-பாகனேரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 68 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 22 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை புது சுக்காம்பட்டி குணசேகர் வண்டியும், 2-வது பரிசை தானாவயல் வெங்கடாச்சலம் வண்டியும், 3-வது பரிசை பதனக்குடி சிவசாமி வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 46 வண்டிகள் கலந்து கொண்டன. இதில். முதல் பிரிவில் முதல் பரிசை திருப்பன்துருத்தி ஆனந்த அய்யனார் வண்டியும், 2-வது பரிசை கோட்டையூர் சுதன் மற்றும் வெட்டுக்காடு என்ஜினீயர் வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை பிரசாத் ஷிபா வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை தேனி மாவட்டம் ஊத்துப்பட்டி பிரபு வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும், 3-வது பரிசை கன்னிப்பட்டி ராஜகண்ணப்பன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்