சிங்கப்பூர் பயணி உள்பட தமிழ்நாட்டில் இன்று 5 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5 பேர் கொரோனாவால் பாதிப்பட்டனர்.

Update: 2023-06-18 16:09 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 5 பேர் கொரோனாவால் பாதிப்பட்டனர். இதில், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுபோக, சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆண்கள், ஒரு பெண் ஆடங்குவர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 பேர் குணமடைந்தனர் வீடு திரும்பினர். 34 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்